2026 மே 09, சனிக்கிழமை

இரத்தினக்கல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

நிவித்திகல, ஹங்கமுவ ஆற்கை மறித்து, இரத்தினக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதற்கு, பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தெம்பிலிதெனிய பிரதேசத்திலேயே, இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து, உயரதிகாரிகளுக்கு பல முறை அறிவித்தும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பெக்கோ இயந்திரம் மூலம், ஆற்றின் நடுப்பகுதி, ஆழமாக தோண்டப்பட்டு, தோண்டப்படும் மணல், கற்கள் ஆகியவை, ஆற்றின் கரையோரம் குவிக்கப்படுவதாகவும் நீரேட்டம் தி​சை திருப்பப்பட்டுவதால், சுற்றாடல் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

எனினும், இந்த இடத்தில் இரத்தினக்கல் அகழ்வதற்கு, இரத்தினக்கல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளமையும் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

எனவே, இவ்விடயத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுத்து, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .