சிவாணி ஸ்ரீ / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில், 417 ஆசிரியர் உதவியாளர்களுக்கு, நேற்று (16) நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
மேற்படி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தலைமையில், இரத்தினபுரி புதிய நகரிலுள்ள குமர வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
அரசாங்கத்தின் மூலம், 2015ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள மலையகப் பாடசாலைகளுக்கு நியமிக்கபட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கே, நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சேவையின் சட்டத்திட்டத்துக்கு அமைய, ஆசிரியர் தகுதிக்கான பயிற்சிகளைப் பூர்த்தி செய்த சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் உதவியாளர்கள் 391 பேருக்கு, தர்ம ஆசிரியர் உதவியாளர் 26 பேர் உள்ளிட்ட 417 பேருக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க, மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலணி, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய உட்பட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், நியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago