2025 மே 12, திங்கட்கிழமை

இரத்தினபுரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் தண்டனை உறுதி

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடையொன்றிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இரத்தினபுரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுதத் திஸாநாயக்க உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இரத்தினபுரி மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 5 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நிராகரித்து தண்டனையை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல கொலையின் போது, கடைக்கு சேதம் விளைக்கப்பட்டது. அந்த சேதம் 50,000 ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மேல்முறையீட்டு மனு, நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ,  குரே ராஜா மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன், திங்கட்கிழமை (26) பரிசீலிக்கப்பட்டது.

மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல கொலையின் போது இரத்தினபுரியில் கடையொன்றை இடித்ததில் 50,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் இரத்தினபுரி மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த இரத்தினபுரி மேல் நீதிமன்றம்  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையால் அந்த அறுவருக்கும் கடுங்காவல் தண்டனையுடன் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்திருந்தது.

இதை எதிர்த்து, மனுதாரர்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X