Editorial / 2017 ஜூன் 15 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இரத்தினபுரி மாவட்டதில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏனைய மாகாணங்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாக, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண சபையின் அனர்த்த முகாமைத்தவ அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி புரியும் விசேட கலந்துரையாடல், நேற்று (14) மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“நிவித்திகல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கபட்ட வீடுகள் மற்றும் பாடசாலைகளை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக மத்திய மாகாண சபையின் உதவிகள் கிடைத்துள்ளன.
“அயகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பாடசாலைகளை உட்பட ஏனை நிறுவனங்களை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு வட மத்திய மாகாண சபையின் உதவிகள் கிடைத்துள்ளன” என்றார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago