சிவாணி ஸ்ரீ / 2020 மார்ச் 16 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், இரத்தினபுரி மாவட்டத்தில் 877,582 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று, இரத்தினபுரி மாவட்டச் செயலாளரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான மாலணி லொக்குபோத்தாகம தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத் தேர்தல் நிலைமைகள் குறித்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹலியகொடை, பெல்மதுளை, பலாங்கொடை, இறக்குவானை, நிவித்திகல, களவான, கொலோன்ன ஆகிய எட்டு தேர்தல் தொகுதிகளில் இருந்தும் 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தேர்தல் பட்டியலின்படி 877,582 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இரத்தினபுரி தேர்தல் தொகுதியில், 130,334 பேரும் எஹலியகொடை தேர்தல் தொகுதியில் 102,356 பேரும், பெல்மதுளை தேர்தல் தொகுதியில் 92,216 பேரும், பலாங்கொடை தேர்தல் தொகுதியில் 116,400 பேரும், இறக்குவானை தேர்தல் தொகுதியில் 111,499 பேரும், நிவித்திகல தேர்தல் தொகுதியில் 104,273 பேரும், களவான தேர்தல் தொகுதியில் 68,326 பேரும், கொலன்ன தேர்தல் தொகுதியில் 152,178 பேரும், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று, இரத்தினபுரி மாவட்டச் செயலாளரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான மாலணி லொக்குபோத்தாகம மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .