Editorial / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி முதல் எம்பிலிப்பிட்டிய உடவளவ பிரதேசம் வரை, ஈஷிகேஷ் முறையில் ஹெரோய்ன் விற்பனை செய்து வந்த ஐவரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கஹவத்தை - அம்பலம்வத்த ஹேன்யாய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்தே, மேற்படி ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து, 5,258 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றுப்பட்டுள்ளது.
அவர்களில் பிரதான சூத்திரதாரிகளான கணவன், மனைவி முறையே 20, 18 வயதுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் மனைவி முன்னர் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றி விட்டு பின்னர் கணவனுடன் ஹெரோய்னுக்கு அடிமையாகியதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஏனைய இளைஞர்கள் மூவரும் காவத்தை, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 20, 25 வயதான இளைஞர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் பரந்துபட்ட பிரதேசமொன்றில், ஹெரோய்னை விநியோகிக்கும் கோஷ்டியாக இனங்காணப்பட்டுள்ளதால், இவ்வியாபாரத்தின் பெரும்புள்ளிகளை இனங்காண்பதற்காக மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago