2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரத்தினபுரி வைத்தியசாலையின் ஐந்து விடுதிகளுக்குப் பூட்டு

Kogilavani   / 2021 ஜனவரி 07 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ் 

இரத்தினபுரி வைத்தியசாலையின் ஐந்து விடுதிப் பிரிவுகள்,  மூடப்பட்டுள்ளன என்று, வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வைத்தியசாலையின் 6,13,14,15,24 ஆகிய விடுதிகளே மூடப்பட்டுள்ளன.

இந்த வைத்தியசாலையின் 6, 24ஆம் விடுதிகளில் வைத்தியர், தாதியர், சிற்றூழியர் மற்றும் நோயாளர்;கள் என 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானமையை அடுத்து, மேற்படி இரு விடுதிப் பிரிவுகளும் கடந்தவாரம் மூடப்பட்டன.

இந்நிலையில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு மேற்படி ஐந்து விடுதிப் பிரிவுகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X