Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி வைத்தியசாலையின் சந்தியில் வரையப்பட்டிருந்த பாதசாரிக் கடவைக்கான மஞ்சள் கோடு, முற்றாக அழிந்துள்ளமையால், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே வரையப்பட்டிருந்த பாதசாரிக்கடவை, தற்போது அழிந்துவிட்டது. எனினும் இதை மீண்டும் வரைவதற்கு, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொழும்பு பதுளை பிரதான வீதியில், கொழும்பிலிருந்து எம்பிலிப்பிட்டிய, பதுளை வரையில், அநேகமான வாகனங்கள் செல்கின்றன. அத்துடன், சந்தியின் அனைத்து பக்கங்களில் இருந்தும் வாகனங்கள் வந்து செல்கின்றன.
பாதையைக் கடக்க முற்படும்போது, பாதசாரிக் கடவை இன்மையாமல், விபத்துக்குள் சிக்கிம் அபாயத்தை உணர்வதாக, பாதசாரிகள் தெரிவித்தனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இந்தப் பாதசாரிக் கடவை அமைப்பதற்கு, நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடத்துள்ளனர்.
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago