Editorial / 2020 மே 03 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்த உதய
இரத்தினபுரி மாவட்டத்தில், எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட தொற்றுநோய் பிரிவு எச்சரித்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இம்மாவட்டத்தில் 281 பேர் எலிக்காய்ச்சலால்; பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, இரத்தினபுரி மாவட்ட தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் லக்மால் கோனார தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டில், இம்மாவட்டத்தில் 747 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் எல்பான, குருவிட்ட, எஹலியகொட, பெல்மடுல்ல, இரத்தினபுரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இரத்தினபுரி மாநகர சபைக்கு உட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலுமே, எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வயற் செய்கைகளில் ஈடுபடுபவர்கள், தேங்கி நிற்கும் நீர்நிலைகளை மய்யமாக வைத்து பயிரச்;செய்கையில் ஈடுபடுவர்கள், காடுகளில் பயிற்சிகளில் ஈடுபடும் முப்படை வீரர்கள் உள்ளிட்டவர்களே, எலிக்காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், மாணவர்கள், ஆசிரியர்கள், பொலிஸார் உள்ளிட்டவர்களும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நோயானது ஒருவரிலிருந்து ஒருவருக்குத் தொற்றாது என்றும் கால்களில் ஏற்படும் காயங்களுக்கூடாக, எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் பக்டீரியாக்கள் உடலுக்குள் ஊடுறுவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
29 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
2 hours ago