மொஹொமட் ஆஸிக் / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமங்கள் வரை நடைபெற்று வந்த இரவு நேர பஸ் சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்படும் என, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
சுமார் 120 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், கண்டியில் அமைக்கப்பட்டுவரும் கண்டி நகர பன்முக போக்குவரத்து நிலையத்தின் இரண்டாம் கட்டப்பணிகளைப் பார்வையிடுவதற்குச் சென்றிருந்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
சில வருடங்களுக்கு முன்னர், நகரிலிருந்து கிராமங்கள் வரை இரவு நேர பஸ் சேவையொன்று நடைபெற்று வந்ததாகவும் இதனால், இரவு நேரக் கடமை முடிந்து வீட்டுக்குச் செல்லும் ஊழியர்கள் பலனடைந்து வந்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் அரசாங்கம் மாற்றம் அடைந்த போது, இலங்கை போக்குவரத்து சபையில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வந்ததாகவும் எனினும் தற்போது போக்குவரத்துச் சபையின் வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.
27 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago