Editorial / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கிருஷ்ணா
காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவ இராணிக்காடு தோட்டத்திலுள்ள ஆற்றில், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அறுவரையும், பொலிஸ் பிணையில் செல்வதற்கு, பொகவந்தலாவ பொலிஸார் அனுமதியளித்துள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்படி பகுதியில் நேற்று (7) திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி அறுவரையும் கைதுசெய்துள்ளதுடன், மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்த பொலிஸார், ஹட்டன் நீதிமன்றத்தில், நாளை (9) ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
13 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago