Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
எம்பிலிப்பிட்டியவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாயின் கையை பதம் பார்த்தவரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதியன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த எரிபொருள் நிரப்பும் நியைத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடியான நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயன்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு பிற்பகல் வேளையில் வந்த எரிபொருள் வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மாலை வேளையில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. இதுதொடர்பில் பொலிஸார் அறிவிப்பொன்றை விடுத்தனர்.
எனினும், வரிசையில் காத்திருந்தவர்கள் எரிபொருள் நிலையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்ற போதே, கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .