Gavitha / 2021 ஜனவரி 18 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனுக்கு எதிராக, முன்னாள் அம்பகமுவ இளைஞர் கழக சம்மேளன தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான கனேஷன் இளையராஜா முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போத, இளைஞர் கழகத்துக்கு வழங்கப்படவிருந்த ஒன்றரை இலட்சம் ரூபாய் பெருமதியான விளைாயட்டு உபகரணங்களை இன்னும் வழங்கவில்லை என்று தெரிவித்தே, இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பகமுவ பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் கீழ் இயங்கும் இருபது இளைஞர் கழகங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்றும் அதை, இராதாகிருஷ்ணனின் இணைப்பாளர், வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் ஜனார்த்தன், இராதாகிருஷ்ணனூடாக பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவித்து, பொருள்களைப் பொறுப்பேற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தப் பொருள்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் அந்தப் பொருள்களுக்கு என்ன நடந்தது என்பதே தங்களுக்குத் தெரியாது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், இதற்குரிய பதிலை வழங்காவிடின், அம்பகமுவ பிரதேசத்திலுள்ள 20 இளைஞர் கழகங்களும் இணைந்து, போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .