Editorial / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சாமிமலை பிரதான வீதியின், மஸ்கெலியா பிரதேச சபையிலிருந்தான சென்.ஜோசப் கல்லூரி வரையான வடிகானில், மண்ணும் கற்களும் நிறைந்துள்ளமையால், பிரதேச மக்கள் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறித்த வடிகான், பல இட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டபோதும் பயனில்லை என்று, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடிகானில் நீர் போவதற்கு இடமில்லை என்பதால், மழைக்காலங்களில், வெள்ள நீர் ஆங்காகே தேங்கி நிற்பதாகவும் இதனால், தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள், குறித்த வடிகானிலிருந்து மண்ணையும் கற்களையும் அகற்றி, நீர் போவதற்கு வழிசெய்து கொடுக்க வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
55 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago