2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

’இறக்குவானை புனித பரியோவான் தமிழ் மகா வித்தியாலயம் தேசியப் பாடசாலையாக தரம் உயர்த்தப்படும்’

உமாமகேஸ்வரி   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குவானை புனித பரியோவான் தமிழ் மகா வித்தியாலயம் தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தப்படும் என, சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இறக்குவனை புனித பரியோவான் தமிழ் மகா வித்தியாலய அதிபர் கமலேஷ்வரன் தலைமையில், பாடசாலை அபிவிருத்தி சங்கக் குழுவினர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை, அவரது அமைச்சில் நேற்று (17) சந்தித்து கலந்துரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில், முன்னாள் ஊவா மாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் முன்னாள் உபச்செயலாளர் ரூபன் பெருமாள், இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர் கோபால் தம்பிராஜா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,

இரத்தினபுரி மாவட்டத்தில், எந்த ஒரு தமிழ் பாடசாலையிலும் க.பொ.த உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞான பாட நெறிகள் இல்லாதக் காரணத்தால், இம்மாவட்ட தமிழ் மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றன் என்றும் இதனால் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடநெறிகளை இப்பாடசாலையில் ஆரம்பிப்பது கட்டாயத் தேவையாகும் என்றும் அவர் கூறினார்.

எனவே, பாடசாலை நிர்வாகம், அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இப்பாடசாலையில் உயர்தரத்தில், கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் புதிய  அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு அமைய, ஆயிரம் பாடசாலைகள்,  தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளன என்றும் இச்செயற்றிட்டத்தின் கீழ்,  இப்பாடசாலையும் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்

அத்துடன் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதுடன், அப்பாடசாலைக்குத் தேவையான காணிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு பணிப்புரை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .