Kogilavani / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இறக்குவானை பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (29) அங்கு 150 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குவானைப் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குவானை நகரம், இறக்குவானை வடக்கு, தெற்கு, கொட்டல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கே இரண்டாம்கட்ட பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர் எம்.எம்.முனவீர தெரிவித்தார்.
இறக்குவானை உக்வத்தப் பிரதேசத்தில், திருமண வீடொன்றில் மணமகன், மணமகள் உட்பட 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்பைப் பேணிய மேலும் 25 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago