2026 மே 09, சனிக்கிழமை

’இறுதி முடிவு இவ்வாரத்துக்குள் வரும்’

மொஹொமட் ஆஸிக்   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட புதுக்கூட்டணியின் சின்னம் தொடர்பான இறுதி முடிவு, இவ்வாரத்துக்குள் எடுக்கப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கண்டியில், தன்னுடைய பிரசாரக் காரியாலயத்தை, நேற்று (20) திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், ஒரு அரசாங்கத்தை பல எதிர்பார்ப்புகளுடனேயே உருவாக்கியது என்றும் எனினும், அந்த அரசாங்கத்தால் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனாலேயே, முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கினர் என்றும் எனினும், கண்முன்னே தெரிந்த வெற்றி, தங்களைவிட்டு அகன்றுவிட்டது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், தற்போது புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியால் எடுக்கப்பட்டுள்ள முடிவு, முக்கியமான முடிவு என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .