Editorial / 2019 மே 02 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், ஒருவரையொருவர் குரோதப் பார்வை பார்ப்பதை விடுத்து, இலங்கையராய் அனைரும் ஒன்றிணைந்து நாட்டின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் எம்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வு, அஞ்சலி நிகழ்வாக பிரதேச வாரியாக இடம்பெற்றது. இதற்கமைவாக, லெதண்டி, டங்கள் ஆகிய தோட்டங்களில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உழைப்பாளர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீர்த்தவர்களின் நினைவாகக் கொண்டாடப்படும் மேதினமானது, இலங்கையில் இவ்வருடம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தொழிலாளர் உரிமைக்காக உறுதிபூணும் இன்றைய நாளில், நாட்டின் பாதுகாப்புக்கும் ஐக்கியத்துக்கும் மத,மொழி, பிரதேச பேதமின்றி, இலங்கையராய் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago