2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கையின் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

R.Maheshwary   / 2022 ஜூலை 28 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பிரபா

இலங்கையின்  தேயிலை உற்பத்தி 23 வருடங்களின் பின்னர் மிகக் குறைந்த பெறுமதியை இவ்வருடம் பதிவு செய்துள்ளது.

இதன்படி, நாட்டிற்கு அதிக அன்னியச் செலாவணியை ஈட்ட உதவி வரும் நாட்டின் தேயிலை தொழில் துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதென ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞான சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்

இலங்கையின் வருடாந்த தேயிலை உற்பத்தி சுமார் 330 மில்லியன் கிலோகிராமாகும், இதில் சுமார் 323 மில்லியன் கிலோகிராம் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், 23 வருடங்களின் பின்னர் மிகக் குறைந்த தேயிலை அறுவடை இந்த வருடம் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதாகவும் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி 08 வீதத்தால் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 130 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு 125 மில்லியன் கிலோகிராமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.

இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டில் காணப்படும் உரம் இன்மை பிரச்சினை மற்றும் எரிப்பொருள் பிரச்சினையே இந்த நிலைக்கு மிக பெரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாகவும் எனவே இவற்றை உடன் தேயிலை துறைக்கு பெற்றுக் கொடுத்து தேயிலை உற்பத்தியை உடன் மீள சரி செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X