Editorial / 2019 ஜூலை 26 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்னவின் ஏற்பாட்டில், இலவச நடமாடும் சேவை, நுவரெலியா புதிய நகர மண்டபத்தில், நேற்று (25) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற்றது.
இதில் பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு, அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகள் செய்துகொடுக்கப்பட்டதுடன், அரசாங்கத் தொழில், காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இந்நடமாடும் சேவையில் நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு நன்மையடைந்தனர்.
நடமாடும் சேவையின் ஆரம்பிப்பு நிகழ்வில், மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன, நுவரெலியா மாநகர பிரதி முதல்வர் யதர்ஸனா புத்திரசிகாமணி, அருநலு ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளருமான வைத்தியர் கே.ஆர்.கிரிசாந், அரச திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago