Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால மற்றும் ஸ்ரீ சபரி யாத்ரா குழுவினரின் ஏற்பாட்டில், இலவச வைத்திய முகாமொன்று, தலவாக்கலையில், நாளை மறுதினம் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்தியாவிலிருந்து வருகைத்தந்துள்ள வைத்தியக் குழுவினர், இலவச வைத்திய சேவைகளை இதன்போது வழங்கவுள்ளனர்.
இந்த முகாமில், அக்குபஞ்சர், சித்த வைத்தியம், வர்மா, கப்பிங் தெரப்பி ஆகிய முறைகளில் தேவையான சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே சிகிச்சை பெற விரும்புபவர்கள், சனிக்கிழமை காலை 8 மணிக்கு முன் வருகைத் தந்து, தத்தமது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .