Freelancer / 2023 மார்ச் 28 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 72 கிராம சேவகர் பிரிவிலுள்ள 25,000 க்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு இலவசமாக அரிசி பொதிகள் இ.தொ.கா இன் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஷ்வரனால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு வட்டக்கொடை சிவசுப்ரமணியம் ஆலய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது. இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச செயலாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2022/2023 ஆண்டுக்கான பெரும்போக நெல்லை அரசாங்கம் விலைக்கு பெற்றுக்கொள்வது மற்றும் நெல்லை பகிர்ந்தளிக்கும் வேலைதிட்டத்துக்கு இணங்க இ.தொ.கா வின் பொது செயலாளரும் , நீர்வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
51 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
15 Jan 2026