2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - நுவரெலியா வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்திக்கு அருகில் இன்று (12) சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மோர்ஹல, பலாங்கொடை, மெதகமமெத்த பகுதியைச் சேர்ந்த நாதிரா சம்பத் (வயது 27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் அவரை கண்டுபிடித்த போது உடலில் வெளிப்புற காயங்கள் இருந்ததாகவும், அருகில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் அந்த நபர் விபத்தில் சிக்குவது பதிவாகியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தலவாக்கலை பிரதேசத்தில் உள்ள மீன் கடையொன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாஜிஸ்திரேட்டினால் நடத்தப்பட்ட பரிசோதனையின் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .