2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

உடைந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி-மாத்தளை வீதி, அலவத்துகொடை நகரில் அமைந்துள்ள மின் கம்பமொன்று உடைந்து விழும் நிலையில் காணப்படுவதாகவும் இதனால் தாம் அச்சத்தின் மத்தியில் பயணிப்பதாகவும் பாதசாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அலவத்துகொடை நகரில் மக்கள் நடமாட்டம்  அதிகமாக காணப்படும் இடத்தில் உள்ள இந்த மின்கம்பத்தால்,  25க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, உரிய அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .