R.Maheshwary / 2022 ஜனவரி 05 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
தெரணியகல பிரதேசத்தில் 11 வயது சிறுமியொருவர், அவரது உடன்பிறந்த 15 வயது சகோதரனால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் 2ஆம் திகதி வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்ட குறித்த சிறுவன், தனது சகோதரியை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த விடயத்தை அறிந்துக்கொண்ட உறவினரான அயல்வீட்டுப் பெண்ணொருவர், சிறுமியை அவிசாவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன், இதன்போது சிறுமி துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினமேத சிறுமியின் சகோதரன், தெரணியகல பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அலுவலகப் பிரிவினரால் அவிசாவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும், சிறுவனை இந்த மாதம் 24ஆம் திகதி வரை தந்தையின் பொறுப்பில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், இது தொடர்பான வழக்கு இந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24 minute ago
28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
32 minute ago