2026 மே 09, சனிக்கிழமை

dd

’உடுநுவரவில் அபிவிருத்தியே இல்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

றம்ஸி குத்தூஸ்

கம்பெரலிய திட்டம், பிரதேச மக்களின்  தேவைக்கல்லாமல் பிரதிநிதிகளின் தேவைக்கேற்பவே  செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். மஸீனம், கண்டி, உடுநுவர பிரதேசத்தில் பாடசாலைகளோ, பாதைகளோ என, வேறு எந்தவோர் அபிவிருத்திச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

இது தொடர்பாக, நேற்று (18) தமிழ் மிரருக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

உடுநுவர பிரதேச சபையின் உறுப்பினர்களில் அதிகமானோர், முஸ்லிம் பிரதேச மக்களின் வாக்குகளினாலும் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருந்தாலும், இங்கு அபிவிருத்தியென்பது வெறும் பூச்சியமாகவே காணப்படுகின்றது என்று கூறினார்.

இந்தப் பிரதேச சபையின் ஆட்சியில், ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்தே செயற்படுகின்ற போதும், ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களின் செயற்பாட்டால், சு.கவில் அங்கம் வகிக்கும் தங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர்கள், அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பங்களை, தங்களுக்கு வழங்குவதில்லை என்றும் ஐ.தே.கவின் சில உறுப்பினர்கள், அபிவிருத்தியைப் பகிர்ந்து செயற்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

சில பிரதேச சபை உறுப்பினர்கள், தன்னிச்சையாகச் செயற்படுவாதாகவும் சில வாக்குறுதிகளைக் கொடுத்துதான், சு.க, ஆட்சியமைக்க இணைந்தது என்றும் கஸறிய அவர், இவர்கள் ஆட்சியை தனித்துக்கொண்டு செல்வதால், சு.க உறுப்பினர்களால் எந்த அபிவிருத்தியையும்  செய்யமுடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .