2026 மே 09, சனிக்கிழமை

உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் நிதிஒதுக்கீட்டில், தெமோதரை நாவில தோட்டத் தொழிலாளர்களுக்கு, உணவுப்பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, இன்று (31) நடைபெற்றது.

கடந்த இரண்டு வாரங்களாக, தெமோதரை நாவில தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு தொழில் பிணக்குகள் காரணமாக  தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போரட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படித் தொழிலாளர்களின் வாழ்வாதார நிலைமையைக் கருத்திற்கொண்டே, தொழிலாளர் குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வில், அரவிந்தகுமார் எம்.பி,  மலையக மக்கள்  முன்னணியின் எல்ல பிரதேச சபை உறுப்பினர் எஸ். இராஜேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .