2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உன்னஸ்கிரிய போராட்டத்துக்கு ஆதரவு

Kogilavani   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, உன்னஸ்கிரிய தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, முழுமையான ஆதரவை வழங்குவதாக, அக்கட்சியின் மலையகப் பிராந்திய இணைப்பாளர் டேவிட் சுரேன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

'உன்னஸ்கிரிய தொழிலாளர்கள், அரசிடமும் பெருந்தோட்ட நிறுவனத்திடமும் தெளிவான கோரிக்கையை முன்வைக்கிறார்கள். தோட்டங்கள் தனியாருக்கு விற்பதை மிகக் கடுமையாக எதிர்க்கும் தொழிலாளர்கள், மாதத்தில் 25 நாட்கள் வேலை வழங்கி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் கோருகின்றனர்.

இதனை செய்ய முடியாவிட்டால், உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு, தோட்டங்களை தாரைவார்ப்பதை நிறுத்தி, தொழிலாளருக்கு தோட்டங்களை பகிர்ந்தளித்து தமது வாழ்வாதாரத்தை உறுதிச் செய்யுமாறே, அவர்கள் கோருகின்றனர்.

உன்னஸ்கிரிய தொழிலாளர்களின் போராட்டத்தை சிதைப்பதற்கு, மலையக மக்களின் புதிய தலைமைகள் என கூறிக்கொள்வோர் கடினமாக பாடுப்படுவதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரச பெருந்தோட்டங்கள், தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என, பிரதமர் தன்னிடம் கூறினார் என்று, அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறாரே தவிர, பிரதமர் ஊடகங்களுக்கு இதுப்பற்றி வாய் திறந்ததாக இல்லை.

இப்போராட்டத்தில், தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செங்கொடிச்சங்கத்தை, அரச பெருந்தோட்ட நிறுவனம், பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது கண்டனத்துக்குரியதாகும். மக்கள் தொடர்ந்து போராடி வருவது மிகுந்த நம்பிக்கையளித்துள்ளது.

தொழிலாளர்களின் வெகுஜன போராட்டங்களை பலப்படுத்துவதற்காக, ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகள் ஒன்றிணைவது அவசியம்'  என அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .