2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

உமா ஓயா அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Kogilavani   / 2017 ஜூலை 07 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா       

உமா ஓயா வேலைத்திட்டத்தின் அகழ்வுப் பணிகள், இன்று முதல், தற்காலிகமாக  நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவிப்பை, மஹாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

நீரை எடுத்துச்செல்லும் சுரங்கப் பாதையில், பெருமளவிலான நீர்க்கசிவு ஏற்படுவதினாலும், மக்களின் போராட்டங்களை முன்னிலைப்படுத்தியும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனான அவசர பேச்சுவார்த்தையினடிப்படையிலேயே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இம்மாதம் 31ஆம்  திகதி நோர்வே நாட்டிலிருந்து விஞ்ஞான தொழில் நுட்பவியலாளர் குழுவினர், உமா ஓயா திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து நேரடியாக விரிவாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை வழங்கவுள்ளனர்.

இது தொடர்பான அறிக்கை, இருவாரங்களில் வெளியிட்டபின்னர், உமாஓயா திட்டம் முன்னெடுப்பது குறித்து, உறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது.

உமா ஓயாத் திட்டத்தினால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க, பதுளை மாவட்ட அரச அதிபர் நிமால் அபயசிரியிடம்,  300 மில்லியன் ரூபாய் நிதியும் அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

உமா ஓயா வேலைத்திட்டத்தின் சுரங்கப் பாதைக்குள் இருந்துவரும் இயந்திர சாதனங்களையும் அப்புறப்படுத்துமாறும், சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .