R.Maheshwary / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் தபாலகத்துக்கு முதியோர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள வந்த முதியவர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சிரேஸ்ட பிரஜைகளுக்கான மாதாந்த கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு, நேற்று (21) ஹட்டன் தபால் நிலையத்தில் வழங்கப்பட்ட நிலையில், நேற்று வரமுடியாதவர்கள் இன்று (22) தபாலகத்துக்கு வந்துள்ளனர்.
எனினும், இன்றும் (22) நாளையும் (23) தபால் நிலையம் மூடப்பட்டிருக்கும் என்பதை அறியாத சிலர் முதியோர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள சென்று, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இவர்களுள் பலர் வாடகைக்கு ஓட்டோக்களை அமர்த்தி வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் தபால் நிலையமானது 22 மற்றும் 23ஆம் திகதிகளில் மூடப்பட்டிருக்கும் என எவ்வித அறிவிப்புகளும் வழங்கப்படாமை காரணமாக, இவ்வாறு முதியவர்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .