Mayu / 2024 மே 06 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
அக்கரபபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் மோர்சன் வனப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பிரதேச வாசிகள் சிலர் விறகு சேகரிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற நிலையில் சடலமொன்று இருப்பதாக பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதற்கமைய, நீதவானின் விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025