2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’உலக கை கழுவுதல் தினத்தில்’ கைகழுவுதலை ஊக்குவித்தல்

Gavitha   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்‌ஷான்

ஒக்டோபர் 15 ஆம் திகதி சர்வதேச கைக்கழுவுதல் தினம் என்பதால், அதனை முன்னிட்டு 'அனைவருக்கும் சுத்தமான  கைகள்' என்ற தொனிப்பொருளிலில், விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு பிரிடோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெருந்தோட்டங்களில் நீர் பாவனை தொடர்பாகவும் முறையான கைகழுவுதல் தொடர்பாகவும்  அறிவூட்டலை மக்களுக்கு ஏற்படுத்தவுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டங்களில் கைகழுவுவதற்கான நீர் குழாய் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரிடோ நிறுவனம் பெருந்தோட்டங்களுக்கு வலியுறுத்தவுள்ளது.

அந்தந்தத் தோட்டங்களில் உள்ள சமூக அபிவிருத்திக் குழுக்கள் தோட்ட நிர்வாகங்களுடன் பேசி இந்த வசதியை செய்து தருமாறு கோரவுள்ளது.

அதேபோன்று மக்கள் பொதுவாகக் கூடும் கொழுந்து நிறுக்கும் மடுவங்களுக்கு அருகில், இவ்வாறு நீர் குழாய்களை அமைப்பது  தொடர்பாக,  தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X