Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 01 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
'உலமாக்கள் ஒன்றுபடுவது என்பது எமது சமூகம் ஒன்றுபட்டுவிட்டதாக அர்த்தப்படுகின்றது. எந்தச் சமூகத்தில் பிளவு, பிரச்சினைகள், மார்க்கச் சார்ச்சைகள், மார்க்கத்துக்கு முரணான விடயங்கள் நடக்கின்றனவோ, அதற்கு உலமாக்கள் மத்தியில் ஒற்றுமை இன்மையே காரணம் என்று கருத வேண்டும். உலமாக்கள் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் அந்த சமூகம் முறையாக வழிநடத்தப்படுவதை நாங்கள் காணலாம்' என குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் சமூக சேவை மற்றும் பிரசாரப் பணிக்கான பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் முஹம்மது இம்ரான் கபூரி ரியாத் தொவித்தார்.
'சமுதாய மாற்றத்துக்கான உலமாக்களின் வகிபாகம்' என்ற தொனிப் பொருளில் மாபெரும் எழுச்சி மாநாடு சனிக்கிழமை(31), குருநாகல் தெலியாகொன்ன ரோயல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'பிரசாரக் களத்தில் இரு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பினர் உலமாக்கள். இன்னொரு தரப்பினர் பொதுமக்கள். இந்தப் பொதுமக்களை வழிநடத்தக் கூடிய சமூகமாக உலமாக்கள் இருத்தல் வேண்டும். உலமாக்கள் மத்தியில் ஒற்றுமை அவசியம். இவர்கள் கருத்து வேறுபாடுகளின்றி ஒன்றுபட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
உலமாக்கள் நபிமார்களின் வாரிசுக்கள் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். நபிமார்கள் செய்த பணியை நாங்கள் செய்துகொண்டு இருக்கின்றோம். அல்லாஹ்வினால் எமது சமூகத்துக்கு வழங்கப்பட்ட அருட் கொடையே உலமாக்கள். குர்ஆனில் உலமாக்கள் பற்றி சிறப்பாக உயர்த்திக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தஸ்துக்களை உடைய நாங்கள் இந்த சமூகத்தை வழிநடத்தக் கூடிய பாரிய பொறுப்பிலே இருக்கின்றோம். ஒரு பாரிய பொறுப்பை எங்களுடைய தலையிலேயே சுமந்து இருக்கின்றோம். இந்த சமூகத்தை வழி நடத்துவதற்காக, கொள்கையிலே ஒன்று பட்டவர்களாக ஒருங்கிணைந்து இருக்கக் கூடிய ஒரு சமூகமாக உலமாக்கள் இருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago