2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உலருணவு பொதி வழங்கல்

Janu   / 2023 ஜூன் 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

இலங்கை சேவா சர்வதேச  அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ஆறுமுக நாவலர் அறப்பணி ஊடாக சேவா அமெரிக்கா நிதியுதவியுடன் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின்  ஏற்பாட்டில்  பொருளாதார ரீதியில் சவாலை எதிர்நோக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன.

தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 25 கிலோ அரிசி 25 கிலோ மா என்ற அடிப்படையில் இப்பொதிகள்  தலவாக்கலை ஸ்ரீகதிரேசன்  ஆலய மண்டபத்தில் வழங்கப்பட்டன.இலங்கை சேவா சர்வதேச அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீமான் இரா.விஜயபாலன்ஜி, இந்து  ஸ்வயம் சேவக சங்க செயற்திட்ட  இணைப்பாளர் சாந்தகுமார்ஜி ஆகியோர் பயனாளிகளுக்கு உலருணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X