Editorial / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுவதற்கு, கட்சி இவ்வளவு தூரம் பின்நிற்பதாகத் தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஆளுநர் தெரிவித்தார்.
நேற்று (22) ஹட்டனில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் காலையில் ஒன்று மாலையில் ஒன்று கூறுகிறார். இரவில் புதிய திட்டத்தை வகுக்கின்றார்.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு, கட்சியின் உறுப்பினர்களாலேயே முடியாமல் உள்ளது. அவர்களும் பல திட்டங்ளை முன்னெடுத்தாலும், அவர்கள் 20 வருட தலைமைத்துவத்தின் கீழ் சிக்கியுள்ளனர்.
எனவே, குறைந்த பட்சம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமது ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வாக்களிக்க முடியாத கட்சி, ஜனநாயகம் என்று கூறுவதில் அர்த்தமில்லை என நாம் கூறுவோம் என்றார்.
கட்சிக்குள் அதிகம் கேள்வி இருப்பது யாருக்கென்பது குறித்த அனைவருக்கும் தெரியும். கரு ஜயசூரியவும் ரணில் விக்கிரமசிங்கவும் அந்த நபரை வேட்பாளராகப் பெயரிடாமல் அவரை சுயாதீன வேட்பாளராக்கி களமிறக்கி அவரைத் தோல்வியடைச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவர் சுயாதீனமாகப் போட்டியிட்டால், செயற்குழுவுக்கு பின்பக்க கதவு வழியாக நுழையும் வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொள்வாரென்றும் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago