Editorial / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், கு.புஸ்பராஜ்
அக்கரப்பத்தனை லங்கம் பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஊட்டுவள்ளி, நல்லத்தண்ணி தோட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக, நேற்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மாதம், தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விடுமுறைக்கால கொடுப்பனவுகளை வழங்கக் கோரியே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும், தோட்ட நிர்வாகத்தால், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொழில் அடிப்படையில் 7 நாள்கள் தொடக்கம் 17 நாள்கள் வரையிலான விடுமுறைக் கொடுப்பனவு வழங்கப்படுவது வழக்கமாகும். இந்தக் கொடுப்பனவை, குறித்த தோட்ட நிர்வாகம், ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதத்தில் வழங்கி வந்துள்ளது.
ஆனால், இம்முறை இக்கொடுப்பனவை இன்னும் வழங்கவில்லை என்றும் கொடுப்பனவை வழங்க தயங்கி வருவதாகவும் தெரிவித்தே, நிர்வாகத்தின் செயலை கண்டித்து, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தோட்ட தொழிற்சங்கத் தலைவர்கள், அவர்களின் கட்சிப் பிரதிநிதிகள், தோட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையொன்றுக்குத் தயாராகி வரும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில், சாதகம் ஏற்படாவிட்டால், மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago