2026 மே 06, புதன்கிழமை

ஊரடங்கு சட்டத்தை மீறிய 07பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 22 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சுந்தரலிங்கம் 

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 07 பேரைப் பொலிஸாரால் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி பகுதியில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 04 பேரும் போட்ரி பகுதியில் ஒருவருமாக மொத்தம் ஐந்து பேரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று மாலை (22) நான்கு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை பொகவந்தலா செபல்டன் தோட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று இரவு சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 08 பேரை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ததன் பின் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .