Editorial / 2020 மார்ச் 31 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சனகுமார ஆரியதாஸ
தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தையிலுள்ள வியாபார நிலையத்தில் கடமையாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு, திடீரென ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர் பணியாற்றிய வர்த்தக நிலையத்தை, தம்புள்ளை சுகாதார பரிசோதகர்கள் தற்காலிகமாக மூடியுள்ளனர்.
தம்புள்ளை கலுந்தெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரே, காய்ச்சல், இருமல், தடிமன், மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்படி ஊழியரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதால், அவரை அநுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
இதேவேளை, மேற்படி இளைஞர் பணியாற்றிய வர்த்தக நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த வர்த்தக நிலையத்தில் பணியாற்றிவரும் ஏனைய ஊழியர்களையும் வீடுகளில் சுயத்தனிமையில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
12 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago