எம். செல்வராஜா / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹாலிஎலை - ஊவா கட்டவளை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் சுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவம், எதிர்வரும் 17ஆம் திகதி, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 20ஆம் திகதி வரை, நடைபெற்று, வைரவர் பூஜையுடன் நிறைவடையவுள்ளது.
இதை முன்னிட்டு, எதிர்வரம் 16ஆம் திகதி, விநாயக வழிபாடு, கிராமசாந்தி, பிரவேசபலி, மஹா கணபதி ஹோமம் நடைபெறவுள்ளதுடன், 17ஆம் திகதி, சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்று, கொடியேற்றம் இடம்பெறவுள்ளது.
18ஆம் திகதி, ஸ்ரீ சிவசுப்ரமணியர் சமேத தேவியர்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத் தேரில் எழுந்தருளி, வீதி வலம்வரவுள்ளதுடன், 19ஆம் திகதி, ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்ரமணியர் திருக்கல்யாண உற்சவமும் அதையடுத்து சுவாமிகள் சித்திரத் தேரில் வீதி உலாவும் நடைபெறவுள்ளது.
20ஆம் திகதி, தீர்த்தோற்சவத்துடன் கொடியிறக்கும் நிகழ்வும் இடம்பெற்று, மாலை நடைபெறும் வைரவர் மடையுடன், உற்சவம் நிறைவுபெறும்.
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago