R.Maheshwary / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஊவா மாகாணத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய, 21,086 மாணவர்களுள் 15,812 பேர், க.பொ.த. உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர் என, முன்னாள் ஊவா மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
இன்று (5) பதுளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
'எமது நாட்டின் கல்விப் பெறுபேற்று கணிப்பின்படி மொனராகலை மாவட்டம் நாட்டின் எட்டாவது இடத்திலும், பதுளை மாவட்டம் நாட்டின் 12வது இடத்திலும் இருந்து வருகின்றன. நாட்டின் 99 கல்வி வலயங்களில், மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில கல்வி வலயம் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ளது.
க.பொ.த. சாதாரண தர பெறுபேற்றுக்களின் அடிப்படையில், தென் மாகாணம், வடமேல் மாகாணம், மேல் மாகாண ம் என்ற வரிசையில், நான்காவது இடத்தில் ஊவா மாகாணமும் இருந்து வருகின்றது.
அத்துடன், ஊவா மாகாணத்தில் 84.61 சதவீத வளர்ச்சியும் தனமல்வில கல்வி வலயமும், பண்டாரவளை கல்வி வலயம் - 77. 96 சதவீதம், வெலிமடை கல்வி வலயம் - 76. 77 சதவீதம், பதுளை கல்வி வலயம் - 75. 71 சதவீதம், மகியங்கனை கல்வி வலயம் - 66.09 சதவீதம் என்ற வகையிலும் க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகள் அமைந்துள்ளன என்றார்.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago