2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’’எங்கள் மக்களின் உரிமைக்கான கூட்டணிக் கட்சி உதயம்

R.Maheshwary   / 2021 நவம்பர் 30 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

"எங்கள் மக்களின் உரிமைக்கான கூட்டணி" எனும் புதிய கட்சி இன்று (30) காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

15 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, தேநீர் கோப்பை சின்னத்தில் இக்கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

இதன் ஆரம்ப வைபவமும்,ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பு சுதந்திர சதுக்க பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றதாக இக் கூட்டணி கட்சியில் இணைந்து செயற்படும் ஐக்கிய  சுதந்திர கட்சியின் பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார்.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி கட்சியில் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் மக்கள் சுதந்திர கட்சி ஆகியவையும் இணைந்து செயற்படுவதாக சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார்.


அத்துடன் ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி, அரனுழு ஜனத்தா பெரமுன,எங்கள் மக்கள் உரிமை கட்சி, மக்கள் முன்னேற்ற கட்சி, நுவரெலியா ஐக்கிய சுதந்திர கட்சி,
நுவரெலியா ஜாதிக்க ஜனபல கட்சி, ஹலபிம ஜனத்தா கட்சி,ஐக்கிய இலங்கை ஜனபல கட்சி,இலங்கை இந்திய வம்சாவளி கட்சி,ஐக்கிய சுதந்திர கட்சி,ஐக்கிய ஜனநாயக மஹஜன கட்சி,இலங்கை ஜனநாயக தேசிய கட்சி, என 15 அரசியற் கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் 

எதிர்காலத்தில் மேலும் பல அரசியற் கட்சிகள்  "எங்கள் மக்களின் உரிமைக்கான கூட்டணி" யில் இணைந்து செயற்பட முன்வரவுள்ளதாகவும் சவேரியார் ஜேசுதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்றைய சூழ்நிலையில் நாட்டில்  மக்கள் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டால் அனுபவித்து வரும் கொடுமைகளில் இருந்து மக்களை காப்பாற்றி, எதிர்கால இலங்கையை கட்டியெழும்பும் நோக்கத்துடன் எடுக்கவிருக்கும் மாற்றத்திற்காக இந்த கூட்டணி செயற்படவே காலத்தின் தேவையுணர்ந்து இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .