2026 மே 09, சனிக்கிழமை

’எத்தனைமுறை அகற்றினாலும் மீண்டும் குவிகின்றது’

செ.தி.பெருமாள்   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மவுசாகலை நீர்த்தேக்கத்தில் காணப்பட்ட கழிவுகளை, மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா பொலிஸார், இராணுவ வீரர்கள், கடற்படையினர் ஆகியோர் இணைந்து, பலமுறை அகற்றினாலும், மீண்டும் அங்கு கழிவுகள் வீசப்படுவதாக, மீனவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேச சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அக்கழிவுகளை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கழிவுகளால், நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே, கழிவுகளை அகற்றி, நன்னீர் மீன்பிடிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .