Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 15 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் எந்தஒருகட்சிக்கும் தனிச்சையாக சபைகளில் ஆட்சி அமைக்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனிதிகாம்பரம் தெரிவித்துள்ளார் .
ஞாயிற்றுக்கிழமை (15) அன்று ஹட்டன் அஜந்தா விருந்தகத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் .
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம். உள்ளூராட்சி மன்றங்களை தனித்து ஆட்சி அமைப்பதற்கான ஆனையினை மக்கள் இம் முறை வழங்கவில்லை ஆகையால் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து தான் சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்
இது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் தீர்மானம் எட்டப்படவில்லை. உள்ளூராட்சி மன்றங்கள் அமைப்பது தொடர்பாக சஜித் பிரேமதாச. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம் பெற்று வருகிறது எங்களோடு எந்த தரப்பும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
ஆட்சியமைக்க ஆளும் கட்சிக்கோ எதிர் கட்சிக்கோ தனிச்சையாக ஆட்சியமைக்க முடியாது யாராவது ஒருவர் சபையில் ஆட்சி அமைக்க வேண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை அதில் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்திக்கு மற்றொருவர் தேசிய மக்கள் சக்திக்கு ஒருவர் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
எமது கட்சியில் இருந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த உறுப்பினரை எமது கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி எமது உறுப்பினர்களை அவர்களின் பக்கம் இழுத்து எடுப்பது என்பது ஒரு மோசடியான வேளைஅவர்கள் கட்சியோடு கலந்துரையாடி சென்றிருந்தால் அதை நாங்கள் வரவேற்போம்
எதிர்கட்சிகாரர்கள் கள்ளர்கள் என கூறு தேசிய மக்கள் சக்திகள்ளர்களை அவர்கள் பக்கம் இழுத்து எடுப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை நாங்கள் ஒரு போதும் தேசிய மக்கள் சக்தியோடு இணைய போவதில்லை என குறிப்பிட்டார்.
எஸ் சதீஸ்
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025