Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஊவா மாகாணத்தில் சிறந்த கல்வியமைச்சராக செயற்பட்ட என்னை இழப்பதற்கு புத்திஜீவிகளும் ஆசிரியர்களும்; விரும்பவில்லை. இதனால், என்னை தொடர்ந்து ஊவா மாகாண கல்வி அமைச்சராக செயற்படுமாறு கோரிவருகின்றனர்' என ஊவா மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின்சார்பில் போட்டியிட்ட என்னை, மக்கள் அமோக வாக்குகளை வழங்கி நாடாளுமன்றத்துக்கு அனுப்பினர்;.
கல்வி அமைச்சராக ஊவா மாகாணத்தில் சிறந்த சேவைகளை ஆற்றியதால் அச்சேவை மீண்டும் தொடர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். அவ்வாறு இல்லாத பட்சத்தில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஊவா மாகாணத்தில் தொடர்ந்து கல்வியமைச்சராக செயற்படுவதா அல்லது நாடாளுமன்றத்துக்குச் செல்வதா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுகுறித்து உயர்மட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Jun 2025
21 Jun 2025