2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

’எனது பிள்ளைகள் என்னைக் கவனிப்பதில்லை’

Editorial   / 2017 ஜூன் 15 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட்  ஆஸிக்

தனது பிள்ளைகள் தன்னை கவனிப்பதில்லை எனக் கூறி  பிள்ளைகளின் தந்தை ஒருவர், நேற்று (14) கட்டுகஸ்தோட்டை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை -  அம்பதென்னை - கஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதுடைய வயோதிபரே இவ்வாறு மதனது பிள்ளைகளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கு மூன்று பிள்ளைகள் இருபப்தாகவும் அவர்கள் தற்போது திருமனம்  செய்து கொண்டு வாழ்வாதாகவும் இவர்கள் மூவரும் தன்னை கவனிப்பதில்லை என்றும்  தனது முறைப்பாட்டில், குறித்த வயோதிபர் தெரிவித்துள்ளார்.

​தான் அக்குறணை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற பின், ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்தியசாலையில் தங்கி இருந்ததாகவும் தன்னை கூட்டிச் செல்ல எவரும் வரவில்லை.

பின்னர் வைத்திய சாலையின் ஊழியர்கள் முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் தன்னை வீட்டுக்கு அனுப்பியபோதும் தனது மகள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதன் பின், தான் சில நாட்களாக பஸ் தரிப்பிடத்தில் தங்கி இருந்ததாகவும் அங்கு மலசலகூட வசதி இல்லாததால்  உணவையும் கட்டுப்படுத்தியாகவும் அவர் பொலிஸாரிடம்  தெரிவித்தார்.

மேலும், தான், பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும்  தன்னை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுமாறும் அவர் பொலிஸாரை கேட்டுக் கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .