Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 24 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
வட்டவளை- கரோலினா தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையை மூடுவதற்கு
எதிர்ப்பு தெரிவித்தும் மூடுவதற்கான காரணத்தை கோரியும் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (23) எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.
இது தொடர்பாக தொழிலாளர்கள் கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், இதுவரை சிறந்த முறையில் தொழிற்சாலை இயங்கி வந்ததாகவம், திடீரென 15 நாள்களுக்கு தொழிற்சாலையை
மூடப்போவதாக தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனவே தொழிற்சாலையை மூடுவதற்கு என்ன காரணம் என்பது தங்களுக்கு தெரியாது என
தெரிவிக்கும் தொழிலாளர்கள், அத்துடன் 15 நாள்;களுக்கு பிறகு தொழிற்சாலையை
திறப்பதற்கான உத்தரவாதம் எதுவும்; தமக்கு வழங்கப்படவில்லை. எனவே மீண்டும் இதனைத்
திறப்பதாக எமக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
தற்போது தொழிற்சாலை மூடுவதற்கான காரணத்தைதான் தற்போது நாம் கேட்கின்றோம்.
தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை வைத்துக்கொண்டு, இத்தோட்டத்தை நாம்
முடக்கம் செய்ய போவதாக கூறி, எமது வயிற்றில் அடித்து விட வேண்டாம் என்ற ஒரு
கோரிக்கையும் முன்வைப்பதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .