2026 மே 06, புதன்கிழமை

‘எமது வெற்றி உறுதியாகிவிட்டது’

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மூவின மக்களும் இம்முறை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையே ஆதரிப்பார்கள் என்றும் கடந்த முறைபோல் இம்முறையும் மாவட்டத்தில் தமது அணியே வெற்றி நடைபோடும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.  

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் பின்னர், நுவரெலியாவில் இன்று(19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,   
 “நுவரெலியா மாவட்டத்தில், தொலைபேசிச் சின்னத்தின் கீழ் போட்டியிடும் எமது வெற்றி, ஏறத்தாள உறுதிப்படுத்தப்பட்டு விட்டது” என்றார்.   

ஜனாதிபதித் தேர்தலின்போது இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று இம்மாவட்டத்தில், சஜித் பிரேமதாஸ வெற்றிபெற்றார் என்றார்.  

எனவே, பொதுத் தேர்தலிலும் நுவரெலியா மாவட்டத்தில் எமது வெற்றி தொடரும் என்றும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துவிட்டனர் என்றும் எனவே, வாக்குகளைச் சிதறடிப்பதற்காக சிறு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு, மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .