Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
நுகர்வோருக்கு உகந்ததல்லாத முறையில் உணவு விற்பனையில் ஈடுபட்டுவந்த 11 பேருக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக, எம்பிலிப்பிட்டிய - நகர முதல்வர் லலித் கமகே, நகரசபையின் பொது சுகாதாரப் பிரிவு, எம்பிலிப்பிட்டிய உடவளவ - பல்லேகம பொதுச் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்பிலிப்பிட்டிய நகரில், இரவு நேரங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் உணவகங்கள், நேற்று (11) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இச்சோதனைகளின் போது, உணவுப் பொருள்களின் தரம், சுவை, சுத்தம், உணவு பறிமாறப்படும் முறை, உணவு தயாரிக்கும், விநியோகிக்கும் ஊழியர்களின் சுத்தம், அவர்கள் அணிய வேண்டிய மேலங்கிகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து சோதனை செய்யப்பட்டன.
இவற்றில், முறையான சுத்தம், ஒழுங்கு, நடைமுறைகள் பேணப்படாத வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் இனங்காணப்பட்டதுடன், அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago