Kogilavani / 2017 ஜூன் 27 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டியவுக்கு உட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபட்டுவரும் இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, இ.போ.சவின் எம்பிலிப்பிட்டிய டிப்போ சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், நேற்று பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
தாக்குதலுக்கு உள்ளான சாரதி, காயமடைந்த நிலையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
எம்பிலிப்பிட்டிய டிப்போவின் சாரதி ஒருவருக்கும் தனியார் பஸ்ஸின் சாரதி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, தனியார் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் இணைந்து, இ.போ.ச பஸ்ஸின் சாரதியை தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து, இ.போ.ச பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்த நிலையில், எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்தே, எம்பிலிப்பிட்டிய டிப்போ பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், நேற்று, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இப்பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago