Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 24 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
நாட்டில் எரிபொருளுக்கான வரிசை தினமும் குறைவின்றி நாடு முழுவதும் காணப்படும் நிலையில், யானையொன்று எரிபொருளுக்காக காத்திருந்த சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளது.
கதிர்காமத்தில் நடைபெறவுள்ள பெரஹெர உற்சவத்தில் கலந்துகொள்ளவுள்ள மியன் ராஜாவை ஏற்றிய லொறியே வரிசையில் காத்திருந்தது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கதிர்காமத்தை நோக்கி புறப்படுவதற்கு முன்னர் யானையுடன் லொறி எரிபொருள் வரிசைக்குள் நுழைந்தது.
கண்டி- கட்டுகஸ்தோட்டையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தனது வாய்ப்பு வரும் வரை யானையும் லொறியில் காத்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .